ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் முயற்சி

ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் முயற்சி

ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் முயற்சி
Published on

ஏலியன்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்கத்துடன் வானியல் ஆராய்ச்சியாளர்கள் 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள வடக்கு நட்சத்திர தொகுப்புக்கு தகவல்களை அனுப்பியுள்ளனர். 

புவியில் மனிதர்கள் வாழ்வதைப்போன்று அண்டத்திலுள்ள வேறு ஏதேனும் கோள்களில் மற்ற உயிரினங்கள் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் நீண்ட ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்கத்துடன் வானியல் ஆராய்ச்சியாளர்கள் 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள வடக்கு நட்சத்திர தொகுப்புக்கு தகவல்களை அனுப்பியுள்ளனர். ஜிஜே 273 ‌என அழைக்கப்படும் அந்த நட்சத்திர தொகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கான தண்ணீர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது‌. 

இதைத் தொடர்ந்து அங்கு ஏலியன்கள் வாழ்கிறார்களா என்பதையும் தெரிந்து கொள்வதற்காக, நார்வேயில் உள்ள வானிலை ஆராய்ச்சியாளர்கள் சிறப்பு ஆன்டெனா மூலம் தகவல் அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலை கேட்டு, அந்த நட்சத்திர தொகுதியில் இருப்பவர்கள் பதில் அனுப்பினால், அது பூமிக்கு வந்து சேர 25 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com