மீண்டு(ம்) வருகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7

மீண்டு(ம்) வருகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7
மீண்டு(ம்) வருகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7

பேட்டரி பிரச்னையால் வெடித்து சிதறிய சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் மீண்டும் வெளியிட உள்ளது.

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட கேலக்ஸி நோட் 7, பேட்டரி கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. இதனால் வெளியிடப்பட்ட இரண்டே மாதங்களில் நோட் 7 விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 7-ஐ புதுப்பித்து மீண்டும் ஜூலை 7-ஆம் தேதி முதல் விற்பனைக்கு விடுகிறது சாம்சங் நிறுவனம். புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன், கேலக்ஸி நோட் 7 ஃபேன் எடிசன் என்னும் பெயரில் தென் கொரியாவில் விற்பனைக்கு வருகிறது. மொத்தமாக 400,000 சாதனங்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 611 டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் ரூ.39,495 ஆகும்.

தற்போது வெளியாகவிருக்கும் கேலக்ஸி நோட் 7 ஃபேன் எடிசன் ஸ்மார்போன் முன்னதை போன்று பேட்டரி பிரச்னை கொண்டிருக்காது எனவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மொபைலாக இருக்கும் எனவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. கேலக்ஸி நோட் 7-ன் தொடர்ச்சியாக கேலக்ஸி நோட் 8-ஐ வரும் ஆகஸ்ட் மாதம் சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com