மார்ச் 6-ல் வெளியாகிறது சாம்சங் ‘எஸ்20 அல்ட்ரா’ - விலை ரூ.92,999

மார்ச் 6-ல் வெளியாகிறது சாம்சங் ‘எஸ்20 அல்ட்ரா’ - விலை ரூ.92,999
மார்ச் 6-ல் வெளியாகிறது சாம்சங் ‘எஸ்20 அல்ட்ரா’ - விலை ரூ.92,999

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ‘எஸ் 20 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் மார்ச் 6-ல் வெளியாகவுள்ள நிலையில் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான சாம்சங் தனது பல்வேறு புதிய ரக ஸ்மார்ட்போன்களை இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் செல்போன் மாடல்களில் கேலக்ஸி ரக போன்கள் பிரபலமானவை. இந்நிலையில் கேலக்ஸி மாடலில் புதிய ரகமான ‘எஸ்20’ சீரிஸ் போன்களை இந்தியாவில் மார்ச் 6ஆம் தேதி சாம்சங் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கும் நிலையில், அதன் விலையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சாம்சங் கேலக்ஸி ‘எஸ் 20’ ஸ்மார்ட்போனின் விலை ரூ.66,999 என்றும், ‘எஸ்20 ப்ளஸ்’ ரகத்தின் விலை ரூ.73,999 என்றும், இதற்கும் மேலாக ‘எஸ்20 அல்ட்ரா’ மாடலின் விலை ரூ.92,999 என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று ரக போன்களுமே ஆண்ட்ராய்டு 10 தளத்தில் இயங்கும். ‘எஸ்20’ ரகம் 6.2 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவும், ‘எஸ்20+’ ரகம் 6.7 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவும், ‘எஸ்20 அல்ட்ரா’ ரகம் 6.9 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவும் கொண்டது. மூன்று போன்களும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டது.

‘எஸ்20’ ரகத்தை பொருத்தவரை பின்புறத்தில் 12 எம்பி + 12 எம்பி + 64 எம்பி (மெகா பிக்ஸல்) என மூன்று கேமராக்கள் உள்ளன. ‘எஸ்20+’ ரகத்திலும் இதே கேமராக்களுடன் கூடுதலாக டெப்த்விஷன் சென்ஸார் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ‘எஸ்20 அல்ட்ரா’ ரகத்தில் 108 எம்பி + 48 எம்பி + 12 எம்பி என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் 40 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. பேட்டரி திறனை பொருத்தமட்டில், எஸ்20ல் 4000 எம்ஏஎச், எஸ்20+ல் 4500 எம்ஏஎச், எஸ்20 அல்ட்ராவில் 5000 எம்ஏஎச் வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ரக போன்களிலும் 5ஜி நெட்வொர்க் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com