டெக்
இந்தியாவில் களம் இறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ்
இந்தியாவில் களம் இறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ்
மொபைல் பிரியர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் அறிமுகமாகிறது.
பிரபல மொபைல் நிறுவனமான சாம்சங் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ் மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டூயல் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ஃபோனின் விலை ரூ.32,990 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. காண்பவர்களின் கண்களை விரிய வைக்கும், அளவிற்கு அழகான வெளித்தோற்றம் கொண்ட இந்த ஸ்மார்ட் ஃபோனின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது. கேலக்ஸி ஏ 8ப்ளஸ் ஜனவரி 20யில் இருந்து ஆன்லைனில் விற்பனையாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 8 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
- 6 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே ரெசல்யூஷன் 1080x2220 பிக்ஸல்ஸ்
- 16 எம்பி கேமரா, 1.6ஜிஹெச்இசட் ஆக்டா கோர் ப்ராஸசர்
- 4ஜிபி ரேம் - 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- 3500 எம்.ஏ.ஹெச் திறனுள்ள பேட்டரி.