சாம்சங் கேலக்ஸி ஏ8, ஏ8+ விலை அறிவிப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ8, ஏ8+ விலை அறிவிப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ8, ஏ8+ விலை அறிவிப்பு
Published on

சாம்சங் கேலக்ஸி ஏ8 மற்றும் ஏ8+ 2018 ஆம் ஆண்டு முதல் வியட்நாமில் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ8 மற்றும் ஏ8+ 2018 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் விலை என்ன? என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேலக்ஸி ஏ8 மற்றும் ஏ8+ மாடல்கள் 2018 ஆம் ஆண்டு வியட்நாமில் விற்பனைக்கு வருவதாக கூறியுள்ளது.

அத்துடன் வியட்நாமை தவிர வேறு எங்கும் தற்போது விற்பனைக்கு வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவியில் இவை 2018 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் சாம்சங் கேலக்ஸி ஏ8 ன் விலை ரூ.31,000 மற்றும் ஏ8+ இன் விலை ரூ.38,000 ஆகும்.

முதல் முறையாக சாம்சங் கேலக்ஸின் இந்த மாடலில்தான் இரட்டை கேமராக்கள் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண்ட்ராய்டு 7.1.1 நொகட், 5.6 இன்ச் எச்.டி டிஸ்ப்ளே ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. பின்புற மற்றும் செல்ஃபி கேமரா ஆகிய இரண்டும் 16 எம்பியுடன் உள்ளது. மேலும் 8 எம்.பியுடன் சென்சார் செகண்ட்ரி கேமராவும் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com