நொய்டா: சாலைகளை சேதப்படுத்திய ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் அபராதம்

நொய்டா: சாலைகளை சேதப்படுத்திய ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் அபராதம்
நொய்டா: சாலைகளை சேதப்படுத்திய ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் அபராதம்

கிரேட்டர் நொய்டாவில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை பதிக்கும் பணியின்போது சாலைகளை சேதப்படுத்திய இரண்டு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெலிகாம் சேவை வழங்குநர்களான ரிலையன்ஸ் டிஜிட்டல் கம்பெனி மற்றும் ஏர்டெல்லின் உள்ளூர் விற்பனையாளர் டெலிசோனிக் நெட்வொர்க் ஆகியவை தங்கள் மொபைல் மற்றும் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை மேலும் மேம்படுத்த பீட்டா 1 மற்றும் பீட்டா 2 ஆகிய பிரிவுகளில் கிரேட்டர் நொய்டா சாலைகளில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை பதிக்கின்றன.  இந்த பணியினால் சாலைகள் பழுதடைந்ததன் காரணமாக குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். இதனால் உள்ளூர் மக்கள் கிரேட்டர் நொய்டா ஆணையத்திடம் பலமுறை புகாரும் அளித்தனர்.

எனவே, கிரேட்டர் நொய்டா ஆணையம் ஜியோ டிஜிட்டல் நிறுவனம் மற்றும் ஏர்டெல்லின் உள்ளூர் விற்பனையாளர் டெலிசோனிக் நெட்வொர்க்கிற்கு தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 15 நாட்களுக்குள் இந்த அபராதத் தொகையை செலுத்துமாறு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. தவறினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுவரை, ஆப்டிகல் ஃபைபர் போடுவதை நிறுத்தி, சாலைகள் முழுவதுமாக சீரமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு சேவை வழங்குநர் நிறுவனங்களை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com