உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா?

உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா?
உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. 

350 சிசி கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பைக்குளின் விலையில் 3,000 ரூபாயை உயர்த்தியது. அதனைத்தொடர்ந்து ஹிமாலயன் 650 சிசி அப்டேட் வெர்ஷன் பைக்குகளின் விலையும் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது விலையேற்றம் கண்டுள்ள பைக்குகளின் விலை பட்டியலை பார்க்கலாம்.

கிளாசிக் 350 (Dual-Channel ABS) - ரூ2,05,004
புல்லட் - ரூ 1,61,385
புல்லட் 350 இ.எஸ் - ரூ1,77,342
மீடிஒர் 350 (பையர் பால்)- ரூ2,08,751
மீடிஒர் 350 ( ஸ்டெல்லார்) - ரூ2,15,023
மீடிஒர் 350 ( சூப்பர் நோவா) -ரூ 2,25,478

புல்லட் 350 பைக்கின் விலை 7,000 முதல் 13,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் 350 பைக்கின் விலை 10,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. Meteor350 ரக பைக்கின் விலையில் 6,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த பிப்ரவரி மாதம் புதிய நிறங்களில் வெளிவந்த Interceptor 650, Continental GT 650 பைக்குகளின் விலையும் 2,75,467 லிருந்து 313,367 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த வாகனத்தின் விலையில் (வாகனங்களின் ரகங்களை பொறுத்து) 6,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 2021-ஆம் ஆண்டுக்கான ஹிமாலயன் அப்டேட் வெர்ஷன் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை 2.01 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com