ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜ் கார்x
டெக்
ரோல்ஸ்ராய்ஸ் 'SPECTRE BLACK BADGE' கார் இந்தியாவில் அறிமுகம்.. ரூ.9.20 கோடி விலை! சிறப்பு என்ன?
இந்திய சந்தையில் தனது புதிய ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜ் (SPECTRE BLACK BADGE) காரை களமிறக்கியுள்ளது ரோல்ஸ்ராய்ஸ். அதன் விலை 9 கோடியே 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜ் (SPECTRE BLACK BADGE) காரை இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது.
சிறப்பம்சம் என்ன?
மின்சாரத்தில் இயங்கும் இந்தக் காரின் விலை 9 கோடியே 20 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் கார்களிலேயே இதுதான் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது 100 கிலோ மீட்டர் வேகத்தை புறப்பட்ட 4.1 நொடியில் எட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்கப்படும் கார்களிலேயே அதிக விலை கொண்ட காராக ரோல்ஸ்ராய்ஸ் ஃபேண்டம் கருதப்படுகிறது. இதன் விலை 11 கோடியே 35 லட்சம் ரூபாய் ஆகும்.