பல் அறுவை சிகிச்சை செய்து அசத்திய ரோபோ

பல் அறுவை சிகிச்சை செய்து அசத்திய ரோபோ

பல் அறுவை சிகிச்சை செய்து அசத்திய ரோபோ
Published on

சீனாவில், ரோபோ ஒன்று பல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது. ரோபோ பல் சிகிச்சை நடத்தியது இதுவே முதல்முறையாகும்.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள பீஹாங் பல்கலைக்கழகம் மற்றும் ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஸ்டோமாட்டாலஜிக்கல் மருத்துவமனை ஆகியவை இணைந்து பல் மருத்துவ ரோபோவை உருவாக்கியுள்ளது.

இந்த ரோபோ, ஒரு பெண்ணுக்கு பல் அறுவை சிகிச்சை செய்து 3 டி பிரின்டிங் மூலம் உருவாக்கப்பட்ட 2 செயற்கை பற்களை பொருத்தி சாதனை படைத்துள்ளது. அறுவை சிகிச்சைக்குரிய திட்ட செயல்பாடுகள் மற்றும் கட்டளைகள் முன்னதாகவே ரோபோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ரோபோ, மருத்துவர்களின் உதவி இல்லாமல் பல் அறுவை சிகிச்சை செய்து அசத்தியது. 

இதுகுறித்து டாக்டர் ஜாவோ யிமின் கூறுகையில், மனிதர்கள் செய்யும் தவறுகளை தவிர்க்கவும், விரைவாக அறுவை சிகிச்சை செய்யவும் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டது. மேலும் சீனாவில் பல் மருத்துவர்கள் பற்றாக்குறையும் இதற்கு முக்கிய காரணம்’ என்றார்.

கடந்த 2015 ஆம் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், 144 பேர் ரோபோ செய்த அறுவை சிகிச்சையினால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com