ஜியோவை தொடர்ந்து ‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்த ஏர்டெல்
தொலைபேசி அழைப்பின் போது வரும் ‘ரிங்’ ஆகும் நேரத்தை ஏர்டெல் நிறுவனம் 25 நிமிடமாக குறைக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சாரசரியாக 45 நொடிகளுக்கு போன் ரிங்கிங் நேரத்தை வைத்திருந்தனர். சமீபத்தில் ஜியோ தனது ரிங் நேரத்தை 20 நொடிகளாக குறைத்தது. இதற்கு ஏர்டெல் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ‘டிராய்’ இடம் புகார் அளித்தது.
உதாரணமாக ஏர்டெல் நெட்வொர்கில் இருந்து ஒருவர் ஜியோ வாடிக்கையாளருக்குக் அழைப்பு விடுத்தால் அது அவருக்கு 20 நொடிகள் மட்டுமே ரிங் ஆகும். இந்தக் குறைவான நேரத்தில் 30 சதவீதம் பேருக்கு மிஸ்டுகால் பெறுவார்கள். இப்போது மிஸ்டுகால்களைப் பார்த்த ஜியோ வாடிக்கையாளர் ஏர்டெல் வாடிக்கையாளருக்குக் கால் செய்வார். இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு அவுட்கோயிங் அழைப்பு தற்போது இன்கம்மிங் அழைப்பாக மாறும். டிராய் விதிகளின்படி இன்கம்மிங் அழைப்பு பெறும் நிறுவனம் எதிர் நிறுவனத்திற்கு IUC(Inter connect Usage Charge) கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு 6 பைசா அளிக்கவேண்டும்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம் இந்த ரிங் நேரத்தை 25 நொடிகளாக மாற்றியது. தற்போது ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தனது ரிங் நேரத்தை 25 நொடிகளாக மாற்றியுள்ளது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் டிராய் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், “ஜியோ நிறுவனம் திடீரென ரிங் நேரத்தை குறைத்ததால் நாங்கள் பல முறை புகார் செய்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நாங்களும் எங்களது ரிங் நேரத்தை 25 நோடிகளாக குறைக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் வோடாஃபோன் நிறுவனமும் தங்களது ‘ரிங்’ நேரத்தை 25 நொடிகளாக குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.