\
Smart Phones
Smart Phonesweb

’ஸ்மார்ட்ஃபோன்கள் விலை 2 ஆண்டுகளுக்குக் குறையாது..’ இதுதான் காரணம்..?

ஸ்மார்ட்ஃபோன்களின் விலை அடுத்த 2 ஆண்டுகளுக்கு குறைய வாய்ப்பில்லை என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
Published on
Summary

ஐடிசி ஆய்வு படி, ஏஐ டேட்டா சென்டர்களுக்கான மெமரி சிப்புகள் தேவை வெகுவாக அதிகரித்ததால் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு தேவையான சிப்புகள் கடுமையாக தட்டுப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஸ்மார்ட்ஃபோன்களின் விலை இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என கணிக்கப்படுகிறது. 2028க்குப் பிறகே விலை மெல்ல குறையும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்ஃபோன்கள் விலை இன்னும் 2 ஆண்டுகளுக்கு அதிகமாகவே நீடிக்க வாய்ப்புள்ளதாக ஐடிசி (IDC) நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. மெமரி சிப்புகள் தட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மெமரி சிப்புகள் தட்டுப்பாடு 2028இல்தான் சரியாகும் என்றும் அப்போதிலிருந்து ஸ்மார்ட்ஃபோன்கள் விலை மெல்ல குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்கள் விலை உயர்வு காரணமாக அவற்றின் விற்பனை இந்தாண்டு 16.7% குறையும் என்றும் அந்நிறுவனத்தின் கணிப்பு கூறுகிறது.

ஏஐ டேட்டா சென்டர்களுக்கான மெமரி சிப்புகள் தேவை பன்மடங்கு அதிகரித்ததால் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான சிப்புகள் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Smart Phones
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏன்? புதிய மசோதா தாக்கலுக்கு காரணம் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com