டெக்
மும்பை: முடங்கியது ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் - சேவையில்லாமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள்
மும்பை: முடங்கியது ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் - சேவையில்லாமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள்
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்தி வரும் மும்பை பயனர்களில் பெரும்பாலானோர் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணைய சேவையை பயன்படுத்துவதில் சிரமம் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ட்விட்டர் தளத்தில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். ‘Not Registered on Network’ என தங்களது மொபைல் போனில் வருவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் உள்ளது.