\
இலவச ஜியோஃபோன் முன்பதிவு நிறுத்தம்

இலவச ஜியோஃபோன் முன்பதிவு நிறுத்தம்

இலவச ஜியோஃபோன் முன்பதிவு நிறுத்தம்
Published on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஜியோஃபோன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2ஜி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ ஃபோனை வாடிக்கையாளர்கள், 1,500 ரூபாய் முன்பணம் செலுத்தி வாங்கலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்பதிவு தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சில நேரங்களிலே 30 லட்சம் மொபைல்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜியோ பீச்சர் போனின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த முன்பதிவு தேதி மற்றும் நேரம் குறித்த விபரங்களை அறிய ஜியோ இணையதள பக்கத்தில் Register now என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com