‘ஆல் இன் ஒன்’  - ஜியோவின் புது பிளான்

‘ஆல் இன் ஒன்’  - ஜியோவின் புது பிளான்
‘ஆல் இன் ஒன்’  - ஜியோவின் புது பிளான்

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய திட்டங்கள அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ‘ஆல் இன் ஒன்’ என்ற பெயரில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 75 ரூபாய் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 500 நிமிடங்கள் கட்டணம் இல்லாமல் ஏர்டெல், வோடாஃபோன், பிஎஸ்.என்.எல் உள்ளிட்ட பிற வாடிக்கையாளர்களுக்கு அழைத்து பேசலாம். அத்துடன் மொத்தம் 3 ஜிபி டேட்டா(ஒரு நாளைக்கு 0.1 ஜிபி) இலவசமாக வருகிறது. 

மேலும், 125 ரூபாய் திட்டத்தில் பிற நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 500 நிமிட கட்டணம் இல்லா அழைப்பு வசதி மற்றும் 14 ஜிபி டேட்டா (ஒருநாளைக்கு 0.5 ஜிபி) கொடுக்கிறது. அதேபோல 155 ரூபாய் திட்டத்தில் பிற நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 500 நிமிட இலவச அழைப்பு வசதி மற்றும் 28 ஜிபி டேட்டா(ஒருநாளைக்கு 1 ஜிபி). 

185 ரூபாய் திட்டத்தில் பிற நிறுவனங்களுக்கு 500 நிமிட இலவச அழைப்பு 56 ஜிபி டேட்டா(ஒருநாளைக்கு 2 ஜிபி). இந்த அனைத்து திட்டங்களிலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இடையில் அழைக்கப்படும் இணைப்பிற்கு கட்டணம் இல்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com