ஜியோ கிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் - நாளை புதிய அறிவிப்பு?

ஜியோ கிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் - நாளை புதிய அறிவிப்பு?

ஜியோ கிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் - நாளை புதிய அறிவிப்பு?
Published on

ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிராண்ட்பேன்ட் சேவையான கிகா ஃபைபரின் வணிக ரீதியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஜியோ போன் 3 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் ஜியோ நிறுவனம் தனது ஜிகா ஃபைபர் சேவையை தொடங்கியது. முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக சோதனை முயற்சியில் ஜிகோ ஃபைபர் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக ரீதியான பயன்பாடு விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ஜியோ கிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்

இதில் மொத்தமாக 3 டேட்டா பிளான்கள் உள்ளன. முதலில் 500 ரூபாய்க்கு ஒருமாத டேட்டா வழங்கப்படுகிறது. இதில் டேட்டா வேகம் 100 எம்பிபிஎஸ் என்ற அளவில் இருக்கும்.

அடுத்தமாக 600 ரூபாய்க்கு ஒரு பிளான் வழங்கப்படுகிறது. இதில் ஜியோ டிடிஹெச், பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் சேவை வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் 100 ஜிபி வரை டேட்டா பெற முடியும்.

மூன்றாவதாக பிரிமீயம் பிளான். இது மாதம் 1000 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில் டிடிஹெச், பிராட்பேண்ட், மற்றும் லேண்ட்லைன் சேவையுடன் இதர சேவையும் வழங்கப்படுகிறது. 

ரிலையன்ஸ் ஜியோ போன் 3

ரிலையன்ஸ் ஜியோ தொடங்கியதில் இருந்து இரண்டு Features போன்களை அறிமுகம் செய்துள்ளது. 4ஜி மொபைல் சேவையுடன் குறிப்பிட்ட முக்கிய ஆப்ஸ்களான யுடியூப் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் இந்த மொபைல் இருந்தது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ போன் 3 விரைவில் அறிமுகம் ஆகும் எனத் தெகிறது. kaios இயங்குதளத்தில் இந்த போன் இயங்கும் எனத் தெரிகிறது.  முந்தைய போன்களை விட பல முக்கிய சிறம்பம்சங்களுடன் இந்த போன் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com