ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை
Published on

ஜியோ சலுகைகள் எதிரொலியாக ஏர்டெல் நிறுவனம் புதியக் சலுகையை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வருகைக்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரூ249-க்கு ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த ரூ.249 சலுகை மூலம் தினந்தோறும் 28 நாட்களுக்கு 2ஜிபி டேடா பயன்படுத்திக் கொள்ளலாம். அன்லிமிடெட் போன் கால் வசதி உண்டு. மேலும் நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம். அனைத்து ரோமிங்கும் இலவசம். அதேபோல் ரூ.349-க்கு தினந்தோறும் 3ஜிபி டேடா உண்டு. 

ஜியோ என்ன கொடுக்கிறது..

ஜியோவில் 198 ரூபாய்க்கே 2 ஜிபி டேட்டாவும், அன்லிமிடெட் போன் கால் வசதியும் உண்டு. அதேபோல், நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம். ஜியோ ரூ299-க்கு 3 ஜிபி டேட்டா வழங்குகிறது. 28 நாட்களுக்கு மொத்தம் 84 ஜிபி கிடைக்கும். 

வோடோபோன் மற்றும் ஐடியா:-

    ரூ.199 பிளான்   - 1.4 ஜிபி டேட்டா தினந்தோறும்
                                  - நாள்தோறும் 250 நிமிடங்கள், வாரந்தோறும் 1000 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம்
                                  - 100 எஸ்.எம்.எஸ் தினந்தோறும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com