ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4 ஜி டவுன்லோடு வேகம் மற்ற செல்ஃபோன் நிறுவனங்களின் வேகத்தை விட இரு மடங்கு அதிகம் என தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்தள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜியோவின் டவுன்லோடு வேகம், 16.48 MBPS ஆக இருந்ததாக டிராய் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. ஐடியா வேகம் 8.33 MBPS ஆகவும் ஏர்டெல்லின் வேகம் 7.66 MBPS ஆக இருந்ததாகவும் டிராய் தெரிவித்துள்ளது. செல்ஃபோன் சேவைகளின் டவுன்லோடு வேகம் குறித்த புள்ளிவிவரத்தை டிராய் மாதாமாதம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.