‘ரெட்மி 7எஸ்’ ஸ்மார்ட்போன் - நாளை மறுநாள் இந்தியாவில் வெளியீடு
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 7எஸ்’ நாளை மறுநாள் இந்தியாவில் வெளியாகவுள்ளது.
சீன நிறுவனமான சியோமி தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 7எஸ்’ என்ற மாடலை இந்திய சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. நாளை மறுநாள் வெளியாகவுள்ள இந்த போன் தொடர்பான முழுத் தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஸ்நாப் ட்ராகன் 730 அல்லது 730ஜி பிராஸரை இந்த போன் கொண்டிருக்கும் எனப்படுகிறது. இதற்கு முன் வெளிவந்த 7 ப்ரோ ஸ்மார்ட்போன் போன்றே, இந்த போனும் 48 மெகா பிக்ஸல் கேமரா கொண்டிருக்கும் எனப்படுகிறது.
‘ரெட்மி 7’ - 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜுடன் வெளிவந்தது. எனவே இந்த போன் அதற்கு அடுத்தப்படியான மெமரியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்புறத்தில் இரட்டை கேமரா மற்றும் முன்புறத்தில் ஒரு செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளதாம். ‘ரெட்மி 7’ ரூ.11,297க்கும், ‘7 ப்ரோ’ ரூ.16,599க்கும் விற்பனை செய்யப்பட்டது. எனவே ‘7 எஸ்’ விலை இவற்றை விட சற்று அதிகமாக இருக்கலாம்.

