ரெட்மி நோட் 10 5ஜி இந்தியாவில் வெளியாகிறது - சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரெட்மி நோட் 10 5ஜி இந்தியாவில் வெளியாகிறது - சிறப்பம்சங்கள் என்னென்ன?
ரெட்மி நோட் 10 5ஜி  இந்தியாவில் வெளியாகிறது - சிறப்பம்சங்கள் என்னென்ன?

சீனாவில் அறிமுகமாகியுள்ள 5ஜி இணைய வசதி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ இந்தியாவில் போகோ எக்ஸ் 3 ஜிடி என்ற பெயரில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

சியோமி நிறுவனம் 5 ஜி இணைய வசதி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ ரக போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த போனை சியோமி நிறுவனம் தனது கிளை நிறுவனமான போக்கோவின் பெயரில் இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் ரெட்மி நோட் 10 சீரிஸ் வகை போன்களான ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் ரெட்மி நோட் 10 எஸ் ரக போன் சந்தைக்கு வந்தது. இந்த ரக போன்கள் 4 ஜி இணைய வசதியை கொண்டதாக இருந்ததால், இதில் 5 ஜி இணைய வசதி கொண்ட மொபைல் அறிமுகப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் ரெட்மி நோட் 5ஜி ரக போன் இந்தியா, துருக்கி, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் போகோ எக்ஸ் 3 ஜிடி பெயரில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பம்சங்கள்: ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மொபைல் போன் 120hz பேனலை கொண்டது. LCD டிஸ்ப்ளேவை உள்ளடக்கியது. மீடியாடெக் டைமன்சிட்டி 1100 பிராசசரை கொண்ட இந்த மொபைல் போன் 8ஜிபி ரேம் வசதி கொண்டது.

64 மெகா பிக்சல் கேமரா, 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு சென்சார், 2 மெகா பிக்சல் மேக்ரோ என மூன்று வகையான கேமராக்களை தனது பின்பக்கத்திலும், 16 மெகா பிக்சல் கேமாரவை தனது முன்பக்கத்திலும் கொண்டுள்ளது. 5000mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்ட ரெட்மி நோட் 5ஜி, 67w வேகமாக சார்ஜ் ஆகும் வசதியை பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com