2K டிஸ்ப்ளே, 512ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளுடன் அறிமுகமானது Redmi K50 - சிறப்பம்சங்கள் என்ன?

2K டிஸ்ப்ளே, 512ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளுடன் அறிமுகமானது Redmi K50 - சிறப்பம்சங்கள் என்ன?
2K டிஸ்ப்ளே, 512ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளுடன் அறிமுகமானது Redmi K50 - சிறப்பம்சங்கள் என்ன?

2K டிஸ்ப்ளே, 512ஜிபி ஸ்டோரேஜ், 108 மெகா பிக்சல் பின்பக்க கேமரா ஆகிய வசதிகளோடு Redmi K50 மற்றும் Redmi K50 Pro மொபைல்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரெட்மி நிறுவனம் நேற்று சீனாவில் இரண்டு புதிய ஃபிளாக்ஷிப் போன்களை அறிமுகப்படுத்தியது. Redmi K50 மற்றும் Redmi K50 Pro ஆகிய இரு மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு வெளியான Redmi K40 சீரிஸின் அடுத்த கட்டமாக வெளியாகி உள்ளன. 108 மெகாபிக்சல் பிரதான கேமரா, உயர் தெளிவுத்திறன் கொண்ட காட்சி மற்றும் 120W வேகமான சார்ஜிங் ஆகிய சிறப்பம்சங்களுடன் வெளியாகி உள்ளது.

என்ன விலை?

சீனாவில் Redmi K50 விலை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்திற்கு சீன யுவான் 2399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 28,644), 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மாறுபாட்டிற்கு சீன யுவான் 2599 (ரூ. 31,031), மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்திற்கு சீன யுவான் 2799 (சுமார் ரூ. 33,419)

சீனாவில் Redmi K50 Pro விலை சீன யுவான் 2999 இல் தொடங்குகிறது (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 35,807). இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வகைக்கானது. 12ஜிபி ரேம் மற்றும் 512GB சீன யுவான் 399 ஸ்டோரேஜ் விலை (சுமார் ரூ. 47,747).

முக்கிய அம்சங்கள்:

Redmi K50 Pro ஆனது MediaTek Dimensity 9000 SoCஐக் கொண்டுள்ளது, இது 4nm கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது கிராபிக்ஸ் செய்ய Mali-G710 GPU வசதியைக் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 512 ஜிபி வரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Redmi K50 Pro ஆனது 1440p திரை தெளிவுத்திறனுடன் 2K AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. திரையில் கார்னிங் கோய்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளது.

Redmi K50 Pro ஸ்மார்ட்போன் 5000mAH பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W வேகமாக சார்ஜிங்கை வசதியைப் பெற்றுள்ளது. சுமார் 19 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகிவிடும் என்று Redmi கூறுகிறது. Redmi K50 Pro ஆனது Optical image stabilization வசதிக்காக 108 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், Redmi K50 ஆனது MediaTek Dimensity 8100 SoC உடன் வருகிறது, இதுவும் 4nm கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது K50 Pro போன்று அதே 2K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது சற்று அதிகமாக 5500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 67W வேகமான சார்ஜிங்கை வசதியை பெற்றுள்ளது. வெகுவிரைவில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் இந்த மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com