நாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்

நாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்

நாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்
Published on

தங்க பேக் கவர் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி ‘கே20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நாளை விற்பனைக்கு வருகிறது.

தற்போதைய காலக் கட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சீன நிறுவனமான ஜியோமி பல மொபைல்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக ரெட்மி மாடல் போன்களுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

குறைந்த விலை போன்கள் பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவர்ந்தாலும், கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் தங்கள் வசதியை பிரதிபலிப்பதற்காக அதிக விலை கொண்ட போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் விலை உயர்ந்த போன்களுக்கு ஒரு சவால் கொடுக்கும் வகையில் சியோமி நிறுவனம் ரெட்மி மாடலில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரித்துள்ளது. அது தான் ரெட்மி ‘கே20 ப்ரோ’. இந்த போனின் விலை ரூ.4,80,000 ஆகும். இந்த போனின் பின்புற கவர் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதில் ‘கே’ என்ற ஆங்கில எழுத்து வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது.. இவையே இந்த விலைக்கு காரணம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே கொண்டது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில் பின்புறத்தில் 48+8+13 எம்பி (மெகா பிக்ஸல்) என 3 கேமராக்களையும், முன்புறத்தில் 20 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளன. 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதனை 27 வாட்ஸ் கொண்ட சார்ஜர் மூலம் விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com