இந்திய மொபைல் போன் சந்தையில் புதுவரவு - லாஞ்ச் ஆனது ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்

இந்திய மொபைல் போன் சந்தையில் புதுவரவு - லாஞ்ச் ஆனது ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்

இந்திய மொபைல் போன் சந்தையில் புதுவரவு - லாஞ்ச் ஆனது ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்
Published on

இந்திய மொபைல் போன் சந்தையில் புதுவரவாக அறிமுகமாகி உள்ளது ரெட்மி நோட் 11 சீரிஸ் போன்கள். ரெட்மி 11 மற்றும் 11S போன்கள் தற்போது அறிமுகமாகி உள்ளன. இந்த போன்களுடன் ஸ்மார்ட் பேண்ட் மற்றும் ஸ்மார்ட் டிவியையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 11 வரும் 11-ஆம் தேதி முதலும், 11S 21-ஆம் தேதி முதலும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 

ரெட்மி 11 சிறப்பம்சங்கள்!

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கும் இந்த போன் 6.43 இன்ச் ஃபுள் ஹெச்.டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC, 6 ஜிபி ரேம், ரியர் சைடில் நான்கு கேமரா, 13 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ், டியூயல் நானோ சிம், 4ஜி கனெக்டிவிட்டி, ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted), டைப் சி சார்ஜிங் போர்ட், 5000mAh பேட்டரி மாதிரியானவை இதில் இடம் பெற்றுள்ளது. 13,400 ரூபாய் முதல் இந்த போன் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. 

ரெட்மி 11S சிறப்பம்சங்கள்!

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டுள்ளது இந்த போன். 6.43 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G96 SoC, ரியர் சைடில் நான்கு கேமரா. அதில் பிரைமரி கேமரா 108 மெகா பிக்சலை கொண்டுள்ளது. 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், டைப் சி சார்ஜிங் போர்ட், 5000mAh பேட்டரியும் உள்ளது. 18,600 ரூபாய் முதல் இந்த போன் இந்தியாவில் விற்பனையாகும் என தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com