நிலவின் தென் துருவத்தை ஆராய ஆர்வம் காட்டும் நாடுகள் - காரணம் என்ன?

நிலவின் தென் பகுதியை ஆராய ரஷ்யா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இப்போது, சந்திரயான் லேண்டரும் தென் துருவத்தைதான் இலக்காக வைத்திருக்கிறது. பல நாடுகளும் நிலவின் தென் துருவத்தை ஆராய ஆர்வம் காட்டுகின்றன. காரணம் என்ன?
moon
moonpt desk

நிலவில் தண்ணீர் இருக்குமா என்பது குறித்து விஞ்ஞானிகளிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தன. 1960-களின் பிற்பகுதிகளிலும், 1970-களின் தொடக்கத்திலும் அமெரிக்காவின் அப்பல்லோ குழு கொண்டுவந்த மாதிரிகளின்படி, நிலவு வறண்டிருக்கும் என்று கருதப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு, பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், நிலவின் மாதிரிகளை புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வு செய்தபோது, எரிமலை துகள்களில் ஹைட்ரஜன் இருந்ததை கண்டறிந்தனர்.

சந்திரயான் 3
சந்திரயான் 3pt desk

2009 ஆம் ஆண்டு, இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 1 விண்கலம், நிலவின் மேற்பகுதியில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. அதே ஆண்டு நாசாவின் இன்னொரு ஆய்வு, நிலவின் தென்பகுதியில், அதன் மேற்பரப்பின் கீழ், பனிக்கட்டி இருந்ததை கண்டுபிடித்தது. முன்னதாக 1998 நாசாவின் லூனார் பிராஸ்பெக்டர், நிலவின் தென்பகுதியில் செறிந்த நிலையில் பனிக்கட்டி இருப்பதை கண்டறிந்தது.

நிலவில் தண்ணீர் இருப்பதை ஏன் விஞ்ஞானிகள் முக்கியமானது என்று கருதுகிறார்கள்? போதிய அளவில் பனிக்கட்டிகள் இருந்தால் நிலவு ஆராய்ச்சிகளுக்கும், வெப்பத்தணிப்புக்கும் போதிய அளவு குடிநீருக்குமான ஆதாரமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எரிபொருளாக ஹைட்ரஜனையும் சுவாசிக்க ஆக்சிஜன் இருப்பையும் உறுதி செய்வதோடு, செவ்வாய் மற்றும் நிலவு ஆய்வில் முக்கியமான பங்குவகிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

moon
லூனா-25க்கும், சந்திரயான்3 க்கும் உள்ள வித்தியாசம் என்ன? லூனா-25ல் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா!
isro
isrop[t web

நிலவின் தென்பகுதி என்பது முந்தைய இலக்குகளில் இருந்து மாறுபட்டது. அதனால்தான் ரஷ்யாவும் தென்பகுதியில் தனது லுனா 25-ஐ தரையிறங்க வைக்க ஆர்வம் காட்டியது. அமெரிக்காவும், சீனாவும் கூட தென்பகுதியில் தரையிறங்க ஆர்வம்காட்டி வருகின்றன. போட்டி அதிகரித்துள்ளதால், நிலவு ஆராய்ச்சியில் பணத்தை கொட்டுகின்றன நாடுகள். இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், அது, தெற்காசிய நாடுகளின் விண்வெளித் துறையில் மாபெரும் மைல் கல்லாக அமையும். அத்துடன், எதிர்காலத்தில் நிலவு ஆராய்ச்சியில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கும் முக்கியமானதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com