'ரியல்மீ 9 சீரிஸ்' வரிசையில் புதிய ஸ்மார்ட் போன்கள்: விலை மற்றும் வசதிகள் என்ன?

'ரியல்மீ 9 சீரிஸ்' வரிசையில் புதிய ஸ்மார்ட் போன்கள்: விலை மற்றும் வசதிகள் என்ன?
'ரியல்மீ 9 சீரிஸ்' வரிசையில் புதிய ஸ்மார்ட் போன்கள்: விலை மற்றும் வசதிகள் என்ன?

ரியல்மீ நிறுவனம் அதன் 9 சீரிஸ் வரிசையில் புதிதாக மேலும் இரண்டு ஸ்மார்போன்களை  இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பட்ஜெட் மற்றும் மிட் ரேஞ்ச் சந்தையில் 5G வசதியைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் Realme 9 5G  மற்றும்  Realme 9 5G SE என்ற ரியல்மீயின் புதிய ஸ்மார்ட்போன்களும் இணைந்திருக்கின்றன.

Realme 9 5G என்ற ஸ்மார்ட்போனின்  4GB+64GB மாடல் 14,999 ரூபாய்க்கும், 6GB+128GB மாடல் 17,499 ரூபாய்க்கும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது. மீடியாடெக் நிறுவனத்தின்  Dimensity 810 5G ப்ராஸசர் இந்த ஸ்மார்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.  90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச்  IPS LCD டிஸ்பிளே இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. 48 MP மெயின் கேமரா மற்றும் 16 MP ஃப்ரன்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5000 mAh பேட்டரியைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.  

அடுத்ததாக Realme 9 5G SE (Speed Edition) ஸ்மார்ட்போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்  கொண்ட 6.6 இன்ச் IPS LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. Snapdragon 778G 5G ப்ராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலும் 48 MP மெயின் மற்றும்  16 MP ஃப்ரன்ட் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5000 mAh பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது மேலும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 6GB+128GB மாடல் 19,999 ரூபாய்க்கும், 8GB+128GB மாடல் 22,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வரவுள்ளது.  

ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி டெக்லைஃப் என்ற துணை நிறுவனத்தின் பெயரில் ஸ்மார்ட்வாட்ச்  மற்றும் வயர்லெஸ் இயர்போன் ஒன்றையயும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. 1,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது TechLife S100 ஸ்மார்ட்ச். 1.69 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்ட இதில் இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை, மற்றும் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் ஆகியவற்றை அளவிடும் சென்ஸார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 நாள்கள் வரை பயன்படுத்தலாம் என்கிறது ரியல்மீ நிறுவனம். மேலும் 1,299 ரூபாய் விலையில் TechLife Buds N100 என்ற வயர்லெஸ் இயர்போன் ஒன்றையும் ரியல்மீ இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

- மு.ராஜேஷ் முருகன்

இதையும் படிக்கலாம்: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE ஸ்மார்ட்போன் அறிமுகம் - ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com