‘ரியல்மி GT நியோ 2, மோட்டோ E40 மற்றும் பல…’ இந்த வாரம் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்!

‘ரியல்மி GT நியோ 2, மோட்டோ E40 மற்றும் பல…’ இந்த வாரம் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்!
‘ரியல்மி GT நியோ 2, மோட்டோ E40 மற்றும் பல…’ இந்த வாரம் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்!

ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் உற்பத்தியாளர்கள் தற்போது நிலவும் ‘சிப்’ தட்டுப்பாட்டினால் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் சாம்சங் W22 5ஜி, ஒன்பிளஸ் 9RT, ரியல்மி GT நியோ 2, மோட்டோ E40 என பல போன்கள் அறிமுகமாகி உள்ளன. 

அது குறித்து பார்ப்போம்…

சாம்சங் W22 5ஜி!

இந்த போனை கேலக்ஸி Z ஃபோல்ட் 3-இன் கஸ்டம் வெர்ஷன் என சொல்லலாம். 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட இந்த போனின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்ச ரூபாயை நெருங்குகிறது.  இப்போதைக்கு இந்த போன் சீனா சந்தையில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது. பிரீமியம் ரக போன் இது.

ஒன்பிளஸ் 9RT!

அண்மையில் தான் இந்த போனும் சீனாவில் அறிமுகமாகி இருந்தது. இதன் விலை 38,000 ரூபாய் இருக்கும் என தெரிகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 8ஜிபி ரேம், 4500 mAh பேட்டரி, 65T வார்ப் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன்.

ரியல்மி GT நியோ 2!

6.2 இன்ச் AMOLED ஃபுள் HD டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 870, 12 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்ட் 11 OS, 5000mAh பேட்டரி, ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் 64 மெகா பிக்ஸல் கொண்ட பிரைமரி கேமரா, 16 மெகா பிக்ஸல் கொண்ட பிராண்ட் கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதன் விலை 24000 முதல் 31000 ரூபாய் வரை இருக்கும். 

மோட்டோ E40!

மோட்டோரோலாவின் மோட்டோ E40 போன் 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள போனின் விலை 9,499 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் யுனிசோக் டி 700 SoC, 1TB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் வசதி மாதிரியானவற்றை இந்த போன் கொண்டுள்ளது. 

விவோ Y20T 

விவோ நிறுவனத்தின் ‘Y’ சீரிஸ் ரக போன்களில் புதுவரவாக அமைந்துள்ளது விவோ Y20T. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட இந்த போனின் விலை 15,490 ரூபாய். 6.51 இன்ச் HD+ஹாலோ ஃபுல் வியூ கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC, 5000mAh பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட கொண்டுள்ளது இந்த போன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com