காற்றில் இருந்து குடிநீரைத் தயாரிக்கும் இயந்திரம்
காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தை சிலி நாட்டைச் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
காற்று மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களைப் பார்த்திருக்கிறோம். தென் அமெரிக்க நாடான சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்திருக்கிறது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், நீர் கிடைக்காத பாலைவனங்களும், மலைப் பகுதிகளிலும் பேருதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இயற்கையில் இருந்து மழைநீரைப் பெறும் உத்திதான் இந்த இயந்திரத்திலும் பயன்படுத்தப்படுகிறது. சிலி நாட்டில் உள்ள பாலைவனங்களில் இந்த இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. வறட்சி காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை ஈடு செய்ய ஈரப்பதமான காற்றை இந்த இயந்திரம் மூலம் குளிர்வித்து வடிகட்டப்பட்டு குடிநீராக பயன்படுத்தலாம் என்றும் அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

