சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்த தனியார் நிறுவனங்கள் எவை?
சந்திரயான் விண்கலத்திற்கான கட்டமைப்பு வசதிகள், ஏவுதளம் போன்றவற்றை நிறுவுவதில் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம் உதவியுள்ளது.
விண்கலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு சாதனங்களை லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் தயாரித்து தந்துள்ளது. இதில் சில கருவிகள் கோவையில் உள்ள எல் அண்ட் டி ஆலையில் தயாரிக்கப்பட்டவை.
கோத்ரெஜ் அண்டு பாய்ஸ் நிறுவனம் எல் 110 இன்ஜின் மற்றும் அது தொடர்பான பொருட்களை தயாரித்து தந்துள்ளது.

இதேபோல வால்சந்த் நாகர், சென்டம் எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்களும் பல பொருட்களை உற்பத்தி செய்து தந்துள்ளன.
ஆனந்த் டெக்னாலஜீஸ் நிறுவனம் விண்கலத்தில் இடம்பெற்ற கணினிகள், கட்டுப்பாட்டு மின்னணு சாதனங்கள் போன்றவற்றை தயாரித்து தந்துள்ளது.
பிரக்யா ரோவருக்கான மென்பொருட்களை ஆம்னி பிரசன்ட் ரோபோடிக் டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்துதந்துள்ளது.
எம்டார்ட் டெக்னாலஜீஸ், மிஸ்ரா தாது நிகர், கோர்ட்டா இண்டஸ்ட்ரீஸ், வஜ்ரா ரப்பர்ஸ் என பல நிறுவனங்களும் சந்திரயானின் வெற்றியில் சிறு சிறு பங்களிப்பை செய்துள்ளன.
இவை தவிர பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் விண்கலத்திற்கான உலோக தகடுகளை உருவாக்கித் தந்துள்ளது.
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம் லித்தியம் அயான் பேட்டரிகள், டைட்டானியம் உலோகக் கலவையுடன் கூடிய உந்துவிசை கலனை உருவாக்கித் தந்துள்ளது.