சிகிச்சையில் பெண்ணின் சுயநினைவை மீட்டு வியக்க வைத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

சிகிச்சையில் பெண்ணின் சுயநினைவை மீட்டு வியக்க வைத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்
சிகிச்சையில் பெண்ணின் சுயநினைவை மீட்டு வியக்க வைத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

சுய நினைவை இழந்த பெண்ணிற்கு நவீன கருவிகளின் உதவியோடு மீண்டும் நினைவை வரவழைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் வியக்க வைத்துள்ளனர்.

மணமேல்குடி அருகே உள்ள விச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் கிளாடிஸ் கீதா. இவருக்கு இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 10-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து மறுநாள் வயிற்றில் இருந்த பொருட்கள் மூச்சுப் பாதைக்குள் சென்றதை அடுத்து அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார். 

மேல் சிகிச்சைக்காக அந்தப் பெண் கடந்த 11ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிநவீன கருவிகளின் உதவியோடு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சையின் ஏழாவது நாளில் இயற்கையாக சுவாசிக்க தொடங்கிய அவர், முழு குணமடைந்து வீடு திரும்பினார். சுயநினைவு இழந்த ஒரு பெண்ணை காப்பாற்றி மிகப்பெரிய சாதனையை செய்த மருத்துவர்களுக்கு மருத்துவமனை முதல்வர் மீனாட்சி பாராட்டுகளை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com