பொள்ளாச்சி: அதிசயம் ஆனால் உண்மை; 24மணி நேரத்தில் ரெடியாகும் கான்கிரீட் வீடுகள்..!

பொள்ளாச்சி: அதிசயம் ஆனால் உண்மை; 24மணி நேரத்தில் ரெடியாகும் கான்கிரீட் வீடுகள்..!

பொள்ளாச்சி: அதிசயம் ஆனால் உண்மை; 24மணி நேரத்தில் ரெடியாகும் கான்கிரீட் வீடுகள்..!
Published on

பொள்ளாச்சியில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 24 மணி நேரத்தில் தயாராகும் கான்கிரீட் வீடுகளால் பொது மக்கள் வியப்படைந்துள்ளனர்.

கட்டுமான துறையில் வீடு உள்ளிட்ட பல்வேறு கான்கிரீட் கட்டடங்கள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். குறிப்பாக பேஸ்மட்டம் அமைத்து அதற்கு பிறகு செங்கல் கட்டடம் எழுப்பி கான்கிரீட் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.


இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியில், பிரிகாஸ்ட் லேப் என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 24 மணி நேரத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பொள்ளாச்சியில் உள்ள பொறியாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையம். கோட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், பள்ளிக் கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் இந்த புதிய தொழில் நுட்பத்தில் தயாராகி வருகிறது. கோவையில் உள்ள வேலன் என்ற தனியார் நிறுவனம் கட்டடத்திற்கான வரைபடத்தை தயாரித்து, பிரிகாஸ்ட் லேப் தொழில் நுட்பத்தில் ராட்சஸ சிலாப்புகளை தயார் செய்து கட்டடங்களை அமைத்து வருகின்றனர்.

இந்த புதிய தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் வீடுகளை சில ஆண்டுகளுக்குப் பிறகு மாற்று இடத்திற்கு கொண்டு சென்று அமைத்துக் கொள்ளும் வசதி உள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற வீடுகள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இக்காலக்கட்டத்தில் விரைவில் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இந்த புதிய முயற்சிக்கு பொள்ளாச்சி பகுதி பொறியாளர்கள் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். காலையில் காலியாக இருந்த இடத்தில் மாலைக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படுவதால் பொதுமக்கள் ஆச்சிரியத்துடனும் வியப்புடனும் பார்த்துச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com