அக்.28ல் விற்பனைக்கு வரும் கூகுளின் புதிய ஸ்மார்ட்ஃபோன்கள்

அக்.28ல் விற்பனைக்கு வரும் கூகுளின் புதிய ஸ்மார்ட்ஃபோன்கள்

அக்.28ல் விற்பனைக்கு வரும் கூகுளின் புதிய ஸ்மார்ட்ஃபோன்கள்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஆகிய, புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் வருகிற 28ஆம் தேதி அமெரிக்க சந்தைகளில் விற்பனைக்கு வர உள்ளன.

பிக்சல் 6 ஃபோன் 599 அமெரிக்க டாலருக்கும், டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட முன்பக்க கேராவைக் கொண்ட கூகுள் 6 ப்ரோ ஃபோன் 899 அமெரிக்க டாலருக்கும் விற்பனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவ்விரண்டு ஸ்மார்ட் ஃபோன்களும், கூகுள் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான 'டென்சார்' எனும் சிப் மூலம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, 'பிக்சல் பாஸ்' எனும் பெயரில், மாதத்திற்கு 45 அமெரிக்க டாலர் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில், புதிய சந்தா சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இந்த சேவையின் மூலம், பிக்சல் 6 ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் யூடியூப் மற்றும் யூடியூப் மியூசிக் செயலிகளின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com