\
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம்.!

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம்.!

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம்.!
Published on

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் சொந்தமான பேடிஎம் செயலி விதிமீறல் காரணமாக கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, சூதாட்டத்திற்கு துணைபுரிவதாகக் கூறி கூகுள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோருக்கு எந்த பிரச்னையும் வராது எனவும், மேலும் வாடிக்கையாளருடைய பணம் பத்திரமாக இருக்கும் எனவும் பேடிஎம் நிறுவனம் டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளது.

ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதால் ஏற்கெனவே பயன்படுத்துவோர் இந்த செயலியை அப்டேட் செய்யவோ, புதிதாக டவுன்லோட் செய்யவோ முடியாது.

பேடிஎம் ஃபார் பிஸினஸ், பேடிஎம் மனி, பேடிஎம் மால் போன்ற அதே நிறுவனத்தால் கையாளப்படுகிற மற்ற செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது. தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள இந்த செயலி மீண்டும் ப்ளே ஸ்டோரில் சேர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com