சமூக வலைதளக்கணக்கு
சமூக வலைதளக்கணக்குமுகநூல்

சிறுவர்களுக்கு சமூக வலைதளக்கணக்கு | இனி பெற்றோரின் அனுமதி கட்டாயம்???

சிறுவர்கள் சமூக வலைதளக் கணக்கு தொடங்க பெற்றோரின் அனுமதியை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Published on

இந்தியாவில் சிறுவர்கள் சமூக வலைதளக் கணக்கு தொடங்க பெற்றோரின் அனுமதியை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டிஜிட்டல் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறுவர், சிறுமியரின் தரவுகளை பெறும் சமூக வலைதள நிறுவனங்கள், அதற்கு முன்பாக பெற்றோரின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதலைப் பெறும் வரை சிறுவர்களின் தரவுகளை நிறுவனங்கள் சேமிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளக்கணக்கு
எல்லை தாண்டிய காதல் | முகநூலில் மலர்ந்த உறவு.. பாகிஸ்தானில் உலாவிய உ.பி இளைஞர்.. சிறையில் அடைப்பு!

விதிகளை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரங்கள் வரைவில் இடம்பெறவில்லை. பிப்ரவரி 18ஆம் தேதிக்குப் பிறகு இந்த விதிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆட்சேபனைகளை MyGov இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com