பானசோனிக் நிறுவனத்தின் நகரும் ‘ஃபிர்ட்ஜ்’

பானசோனிக் நிறுவனத்தின் நகரும் ‘ஃபிர்ட்ஜ்’
பானசோனிக் நிறுவனத்தின் நகரும் ‘ஃபிர்ட்ஜ்’

எலக்டிரானிஸ் பொருட்களுக்கு பெயர்போன பானசோனிக் நிறுவனம் பெயர் சொல்லி அழைத்தால், அழைக்கும் இடத்திற்கு வரும் நகரும் குளிர்சாதனப் பெட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

உணவு வீணாவதை தடுக்கவும், உணவு பொருள்களை ஃபிரஷ் ஆக வைக்கவும் குளிர்சாதன பெட்டியில் பொருள்களை வைத்து தேவைப்படும்போது அதை எடுத்து பயன்படுத்துவது வழக்கம். ஆனால் உணவு பொருள்களை நாம் இருக்கும் இடத்திற்கே வந்து கொடுக்கும் நகரும் குளிர்சாதனப் பெட்டியை பானசோனிக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. தானாக நகரும் அந்த குளிர்சாதனப் பெட்டிக்கு ‘கு’ என பெயரிடப்பட்டுள்ளது. LIDAR மற்றும் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ஃபிர்ட்ஜ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே தொழில்நுட்பம் தான் கூகுள் நிறுவனத்தின் தானியங்கி கார்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை அல்லது செல்லப்பிராணிகள் போன்று ‘கு’ என அழைத்தால் பின்னாடியே வரும் இந்த குளிர்சாதனப் பெட்டி, சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குரல் வழி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் யார் அழைத்தாலும், பாதைகளில் தடைகள் இருந்தாலும் எதிர்த்து அழைத்த இடத்திற்கு வந்து உணவு பொருள்களை அளிக்கிறது. ‘கு’ குளிர்சாதனப் பெட்டி பெரும்பாலும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பானசோனிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி கூறுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com