‘தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கவே கணினி கண்காணிப்பு’ - மத்திய அரசு

‘தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கவே கணினி கண்காணிப்பு’ - மத்திய அரசு
‘தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கவே கணினி கண்காணிப்பு’ - மத்திய அரசு

மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் கணினிகளில் பதிவாகியுள்ள தகவல்களை கண்காணிப்பது தனிமனிதர்களின் சுதந்திரத்தை பாதுகாக்கவே என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2018 டிசம்பர் மாதம் 20ஆம் தேதி ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. அதில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் கணினிகளில் பதிவாகியுள்ள தகவல்களை குறுக்கீடோ, கண்காணிக்கவோ அல்லது குறியாக்கம் செய்யவோ அனுமதியளித்தது. அதன்படி தேசிய புலானய்வு அமைப்பு, சிபிஐ, ரா, மத்திய உளவுத்துறை, டெல்லி கமிஷ்னர், அமலாக்க துறை, மத்திய நேரடி வரிகள் ஆணையம், வருவாய் புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட பத்து நிறுவனங்களுக்கு மக்களின் கணினி தகவல்களை கண்காணிக்கலாம் என அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் முயற்சி பலரும் விமர்சித்தனர். அத்துடன் இது மத்திய அரசின் கண்காணிப்பிற்குள் மக்களை கொண்டுவருவதற்காக அளிக்கப்பட்டது என பல தரப்பினர் கூறிவந்தனர். எதிர்கட்சிகளும் இந்த அறிக்கையை கடுமையாக சாடியுள்ளனர். இதனையடுத்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் இந்த அறிவிக்கை தனிமனித சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாக கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாராணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற போது, மத்திய அரசு தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. அதில் “இந்த அறிவிக்கை தகவல்தொழில்நுட்ப சட்டம் 2000த்தின் பிரிவு 69ன்படி மற்றும் தகவல்தொழில்நுட்ப விதிகளில் நான்காவது விதியின்படியும்தான் வெளியிடப்பட்டுள்ளது. 
மேலும் இந்த அறிவிக்கையின் வாயிலாக அரசின் கண்கானிப்பு அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த அறிவிக்கை 10 நிறுவனங்களுக்கு மட்டும் தான் கண்காணிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இதில் இடம்பெறாத வெறு எந்த அமைப்பும் மக்களை கண்காணிக்க முடியாது. அத்துடன் எந்த அமைப்பு தனிச்சையாக மக்களின் தகவல்களை கண்காணிக்க முடியாது. அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும்.

அதேசமயம் பயங்கரவாதிகளால் நாட்டிற்கு அச்சுறுதல்கள் உள்ளதால் அவர்களை கட்டுபடுத்த அரசிற்கு தகுந்த புலானய்வு தரவுகள் தேவைப்படுகின்றன. இதனால் விரைவில் முடிவுகளை எடுப்பதற்கு ஒரு அரசு அதிகாரம் தேவைப்படுகிறது. இதை மேற்பார்வை செய்ய மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமயில் குழு அமைக்கப்பட்டுள்ளதால் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com