இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்தது ஒப்போ ரெனோ 7 5ஜி!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்தது ஒப்போ ரெனோ 7 5ஜி!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்தது ஒப்போ ரெனோ 7 5ஜி!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன். லைவ் ஸ்ட்ரீம் மூலம் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஒப்போ மற்றும் பிளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரெனோ 7 5ஜி சிறப்பம்சங்கள்!

6.43 இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC, 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரைமரி கேமரா. 4500 mAh திறன் கொண்ட பேட்டரி, டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போன். 

இதன் விலை 28,999 ரூபாயாகும். விற்பனையை முன்னிட்டு சில பிரத்யேக சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த போனில் வேண்டுமானால் ரேமை Extend செய்து கொள்ளும் ஆப்ஷனும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Startrails Blue வண்ணத்தில் இந்த போன் இப்போது விற்பனையாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com