3டி வளைந்த திரை: ஒப்போ ரெனோ 4 ப்ரோ இந்தியாவில் இன்று அறிமுகம்!

3டி வளைந்த திரை: ஒப்போ ரெனோ 4 ப்ரோ இந்தியாவில் இன்று அறிமுகம்!

3டி வளைந்த திரை: ஒப்போ ரெனோ 4 ப்ரோ இந்தியாவில் இன்று அறிமுகம்!
Published on

ஓப்போ ரெனோ 4 ப்ரோவை கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டதை அடுத்து, வேறு ஒரு மாடலை இந்தியாவில் அறிமுகப் படுத்தியிருக்கிறது. இந்த போன் மார்க்கெட்டில் இருக்கும் போட்டி வரிசையில் ஒன்றாக இருக்கும். ஆகுமெண்டேட் ரியாலிட்டி ஏவுதள வசதியுடையதாக இருக்கும். ஏ.ஆர் வசதி பயனாளிகளுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் வீட்டிலிருக்கும் அனைத்தையும், பாதுகாப்பு வசதிகளையும் உறுதிசெய்துகொள்ள முடியும்.

ஓப்போ ரெனோ 4 ப்ரோ பார்டர் இல்லாத ஒரு வடிவமைப்புடன் வந்திருக்கிறது. இதன் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ், ஒன்பிளஸ் 8 சீரீஸ் மற்றும் மோட்டோ எட்ஜ் + வகைகளில் இருக்கும் 3டி வளைந்த திரை வசதி இதிலும் இருக்கும்.

இந்த திரை 1080*2400 பிக்ஸல், 402 பிக்ஸல் டென்சிட்டியும் கொண்டது. 90 Hz திரையுடனும், 65W SuperVOOC 2.0 சார்ஜிங் வசதியுடனும் வந்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்.இ செல்ஃபி கேமிராவும், செங்குத்தான மூன்று பின்புற கேமிராக்களும் உள்ளன. இதன் விலை 34,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன டெக்னாலஜி அடங்கிய ஓப்போ போனுக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com