மடிக்கக்கூடிய போனை அறிமுகம் செய்தது ஓப்போ... தரமான சிறப்பம்சங்கள்
மொபைல் போன்கள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று தற்போது மடக்கி வைக்கும் அளவிற்கு (ஃபோல்டபிள்) புதிய அவதாரம் எடுத்துள்ளன. பல்வேறு முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஃபோல்டபிள் போன்களை வடிவமைத்து வருகின்றன. அந்த வகையில் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ, மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போனை முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. INNO DAY 2021 நிகழ்வில் இந்த போனை ஓப்போ அறிமுகம் செய்துள்ளது.
இந்த போனின் சிறப்பம்சங்கள்?
7.10 இன்ச் பிரைமரி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 புராஸசர், 32 மெகா பிக்சல் ஃபிராண்ட் கேமரா, 50MP + 16MP + 13MP என மூன்று கேமரா ரியர் சைடில் உள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 4500 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டியூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், 5.49 இன்ச் வெளிப்புற டிஸ்பிளே மாதிரியானவற்றை இந்த போன் கொண்டுள்ளது.
இதன் சந்தை விலை மற்றும் விற்பனை எப்போது என்பதை விரைவில் ஒப்போ தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.