விரைவில் விற்பனைக்கு வரும் ஒப்போ எஃப்21 ப்ரோ 4ஜி: என்னென்ன வசதிகள்? என்ன விலை?

விரைவில் விற்பனைக்கு வரும் ஒப்போ எஃப்21 ப்ரோ 4ஜி: என்னென்ன வசதிகள்? என்ன விலை?

விரைவில் விற்பனைக்கு வரும் ஒப்போ எஃப்21 ப்ரோ 4ஜி: என்னென்ன வசதிகள்? என்ன விலை?

32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, மொபைலை தொடாமலேயே ஸ்வைப் செய்யும் “Air Gesture” உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது ஒப்போ எஃப்21 ப்ரோ 4ஜி.

இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் “Oppo” நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய மொபைல் “Oppo F21 Pro 4G”. தற்போது பட்ஜெட் மொபைலாக இந்தியாவில் ஏப்ரல் 21 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. போர்ட்ரெய்ட் புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் செல்ஃபி எடுப்பவர்களை இலக்காகக் கொண்டு இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது.

என்னென்ன வசதிகள்?

Oppo F21 Pro 4G 6.4-இன்ச் AMOLED Full HD+ டிஸ்பிளேவை வழங்குகிறது. குவால்கம் ஸ்நாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியைப் பெற்றுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, 64 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்கு, 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 4,500mAh பேட்டரியை பெற்றுள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorIS 12.1 இல் இயங்குகிறது.

சிறப்பு வசதி:

தொலைபேசியைத் தொடாமலேயே கைகளை ஸ்வைப் செய்வதன் மூலம் ஒருவர் பதிலளிக்க, அழைப்புகளை முடக்க அல்லது பக்கங்களில் மேலும் கீழும் ஸ்க்ரோல் செய்ய ஏர் சைகைகளைப்(Air Gesture) பயன்படுத்த முடியும். இதிலுள்ள AMOLED பேனல் தெளிவான மற்றும் பிரகாசமான உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை பயனர்களுக்கு அளிக்கும்.

என்ன விலை?

இது ரூ.25,000 விலை பிரிவில் அதாவது பட்ஜெட் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்போ எஃப்21 ப்ரோ 4ஜி ரூ.22,999 ஆரம்ப விலையில் வருகிறது. சில வங்கி அட்டைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் ஒரு பகுதியாக கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.

இந்த விலைக்கு Worth-ஆ?

உண்மையில் இல்லை. இந்தப் பிரிவில் இந்த மொபைல் சிறந்தது அல்ல. ஆனால் உங்கள் தேவைகளைப் பொறுத்து அதை வாங்குவதை நீங்கள் இன்னும் பரிசீலிக்கலாம். இந்த விலை வரம்பில், பெரும்பாலான பிராண்டுகள் சற்றே சிறந்த அம்சங்களுடன் 5G போனை வழங்குகின்றன. நீங்கள் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்றால், OnePlus Nord CE 2 Lite, Xiaomi 11i மற்றும் 5G-வசதியில் தயாரான வேறு மொபைல்களையும் பார்த்து விடுவது நல்லது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com