\
ஒப்போ F19 புரோ + 5ஜி ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்கியது

ஒப்போ F19 புரோ + 5ஜி ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்கியது

ஒப்போ F19 புரோ + 5ஜி ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்கியது
Published on

ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் வரும் 17-ஆம் தேதியன்று F19 புரோ + 5ஜி ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளதாக ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் இந்திய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது. அமேசான் நிறுவனத்துடன் இணைந்து இந்த முன்பதிவை ஒப்போ ஆரம்பித்துள்ளது. 

அண்மையில் நடைபெற்ற ஆன்லைன் இசை நிகழ்வு ஒன்றில் இந்த மாடலை ஒப்போ பொதுவெளியில் பார்வைக்காக வெளியிட்டிருந்தது.   

50 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி. 5ஜி மற்றும் 4ஜி மொபைல் டேட்டா மாற்றும் வசதி. 4310 mAH பேட்டரி, டியூயல் வீடியோ பார்க்கும் வசதி, சூப்பர் AMOLED டிஸ்பிளே, ரியர் சைடில் நான்கு கேமரா, மீடியா டேக் 5ஜி டைமன்சிட்டி 800U சிப், அல்ட்ரா தின் டிசைன், கேம் போக்கஸ் மோட் என தனித்துவத்தில் இந்த ஸ்மார்ட்போன் அசத்துகிறது. 

மேலும் அனைத்து லைட்டிங்கிலும் துல்லியமாக வீடியோ படம் எடுக்க உதவும் AI Highlight Portrait Video மோடும் இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com