"ரெனோ" 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிவிரைவில் அறிமுகம் - ஒப்போ 

"ரெனோ" 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிவிரைவில் அறிமுகம் - ஒப்போ 

"ரெனோ" 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிவிரைவில் அறிமுகம் - ஒப்போ 
Published on

ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அதிவிரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை ஒப்போ இந்தியா உறுதி செய்துள்ளது. ஒப்போ ரெனோ 7 5ஜி, ரெனோ 7 புரோ 5ஜி மற்றும் ரெனோ 7SE 5ஜி என ரெனோ 7 சீரஸில் மூன்று போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. கடந்த ஆண்டு சீன தேச சந்தையில் ரெனோ 7 சீரிஸ் போன்கள் அறிமுகமாகியிருந்தன. ரெனோ 7 5ஜி போனில் குவால்காம் ஸ்னாப்டிரேகன் 778G SoC சிப் மற்றும் ரெனோ 7 புரோ 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1200-Max SoC சிப்பும் இருக்கும் என தெரிகிறது. மேலும் முதற்கட்டமாக இந்த போன்கள் பிளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் எனவும் ஒப்போ அறிவித்துள்ளது. 

இதில் ரெனோ 7 5ஜி போனின் விலை 28000 முதல் 31000 ரூபாய் வரை இருக்கலாம் எனவும், ரெனோ 7 புரோ 5ஜி போன் 41000 முதல் 43000 ரூபாய் வரை இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த போன்களின் வேரியண்ட் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

ரெனோ 7 5ஜி மற்றும் ரெனோ 7 புரோ 5ஜி சிறப்பம்சங்கள்!

6.43 இன்ச் டிஸ்பிளே, 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் 50 மெகா பிக்சல் கொண்டுள்ளது பிரைமரி கேமரா. 4500 mAh திறன் கொண்ட பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டுள்ளது. இதில் ரெனோ 7 புரோ 5ஜி 6.40 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com