\
டிசம்பர் 1ல் வெளியாகும் ஓப்போ ஏ79: சிறப்பம்சங்கள் மற்றும் விலை

டிசம்பர் 1ல் வெளியாகும் ஓப்போ ஏ79: சிறப்பம்சங்கள் மற்றும் விலை

டிசம்பர் 1ல் வெளியாகும் ஓப்போ ஏ79: சிறப்பம்சங்கள் மற்றும் விலை
Published on

சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன் ஓப்போவின் புதிய மாடலான ஏ79 டிசம்பர் 1ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்போ ஸ்மார்ட்ஃபோன்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவையாக உள்ளது. குறிப்பாக செல்பி பிரியர்கள் அதிகமாக ஓப்போ செல்போன்களையே விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில் ஓப்போ நிறுவனத்தின் புதிய படைப்பான ஏ79 டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது.

இந்த ஸ்மார்ட்ஃபோன், 6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டது. பி23 ப்ராஸசருடன் வெளியாகும் இதில், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு திறன் அளிக்கப்பட்டுள்ளது. 7.1 ஆண்ட்ராய்டு வசதியுடன், கலர்ஸ் 3.2 ஓஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் 3,000 எம்ஏஎச் ஆகும். 16 எம்பி பின்புற கேமரா மற்றும் 16 எம்பி முன்புற கேமரா உள்ளது. இதன் விலை ரூ.23,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com