அசத்தலான அம்சங்களுடன் வெளியான OPPO A78 5G: MidRange ஸ்மார்ட் போன்களுக்கு Checkmate?

அசத்தலான அம்சங்களுடன் வெளியான OPPO A78 5G: MidRange ஸ்மார்ட் போன்களுக்கு Checkmate?
அசத்தலான அம்சங்களுடன் வெளியான OPPO A78 5G: MidRange ஸ்மார்ட் போன்களுக்கு Checkmate?

OPPO நிறுவனம் அட்டகாசமான அம்சங்களுடன் அதன் புதிய A78 5G மிட் ரேஞ்சு ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன், ColorOS 13-ல் இயங்கும். இது OPPO-ன் டைனமிக் கம்ப்யூட்டிங் எஞ்சினுடன் கூடிய மீடியா டெக் டைமன்சிட்டி 700 சிப் மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பகத்துடன் இரண்டு வண்ண விருப்பங்களில் நுகர்வோரின் கைகளுக்கு கிடைக்கும்.

OPPO A78 5G ஸ்மார்ட் போன் சிறப்பம்சங்கள்:

*1TB வரை சேமிப்பக விரிவாக்கம்
*50 MP டூயல் கேமரா
*33 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங்
*டிஸ்பிளே வசதி
*இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
*OPPO Glow-வுடன் பிரீமியம் வடிவமைப்பு
*இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்

மேற்கண்ட அம்சங்கள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

1TB சேமிப்பக விரிவாக்கம்:

8ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பகத்துடன் இந்த போனானது வெளியிடப்பட்டுள்ளது. அதிகமான தகவல்களை சேமித்து வைக்கும் பயனர்களுக்காக நினைவகத்தை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 1TB வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். பல்வேறு பணிகளையும் திறமையாக மேற்கொள்வதற்காக ஃப்ளெக்ஸ் டிராப், கூகுல் லென்ஸ், புகைப்படத் தகவல் பாதுகாப்புடன் மூன்று விரல் மொழியாக்கம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தனிப்பட்ட தரவு கசிவைத் தடுக்க மற்றும் புகைப்படம், வீடியோ மெட்டாடேட்டா போன்றவற்றை அழிக்க பயனர்களை அனுமதிக்கிறது.

50 MP டூயல் கேமரா:

OPPO A78 5G டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. இது 50MP மெயின் மற்றும் 2 MP டெப்த் சென்சார் கொண்ட கேமராக்களுடன் இயங்குகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8MP செல்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது. முன்பக்கம் நன்கு வெளிச்சம் மிகுந்த இடங்களில் 50MP ஸ்னாப்ஷாட்களுடன் கூடுதலாக, ஷூட்டர் 12.5 MP பிக்சல்-பின்னட் புகைப்படங்களை குறைந்த ஒளி சூழலில் மிகவும் துல்லியமான வண்ணங்களில் கைப்பற்றுகிறது. AI போர்ட்ரெய்ட் ரீடச்சிங், AI காட்சி மேம்படுத்தல், அல்ட்ரா நைட் மோட் போன்ற ஸ்மார்ட் இமேஜிங் அம்சங்களையும் கொண்டுள்ளது.

33 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங்:

இந்த போனானது அதிக திறன் கொண்ட 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இது OPPOவின் 33W SUPERVOOCTM ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தால், சுமார் 60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். முழுமையாக சார்ஜ் செய்த பின்னர் 23 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தைக் கொண்டுள்ளது. இதன் சூப்பர் நைட் ஸ்டான்ட்-பை  வசதியானது, பயனரின் தூக்க முறைகளை பகுப்பாய்வு செய்து இரவில் மின் நுகர்வை 2 சதவீதமாக குறைக்கிறது. இதனால் மின் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது. இதன் சூப்பர் பவர் சேமிப்புமுறையானது, பேட்டரி சார்ஜ் குறைவாக இருக்கும் போது அவசரநிலைகளுக்கு ஆற்றலைச் சேமிக்க முடியும்.

டிஸ்பிளே வசதி:

இந்த ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் ஹெச்டி+ 720x1612 பிக்சல் எல்சிடி ஸ்க்ரீன் வசதி உள்ளது. இதனுடன் 90HZ மிருதுவான காட்சிகளுக்காக 90Hz ரெஃப்ரெஸ் ரேட், 269ppi Pixel அளவு போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. கண் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பார்வை அனுபவத்திற்காக நாள் முழுவதும் AI கண் ஆறுதல் வசதியுடன் இயங்குகிறது.

இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்:

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களானது ஹை-டெஃப் வீடியோக்கள், கேம்களுக்கு அதிவேக சரவுண்ட் ஒலியை வழங்க சோதிக்கப்பட்ட ஒரிஜினல் சவுண்ட் டெக்னாலஜியுடன் வருகிறது. இது அல்ட்ரா வால்யூம் பயன்முறையை கொண்டுள்ளதால், தெளிவான ஒலியைக் கேட்க ஸ்பீக்கர் அளவை 200 சதவீதம் அளவுக்கு உயர்த்திக் கொள்ள முடியும்.

OPPO Glow-வுடன் பிரீமியம் வடிவமைப்பு:

கேமரா மாட்யூலைச் சுற்றி பளபளப்பான ரிங்ஸ் மற்றும் பேக்ப்ளேட் வரை நீட்டிக்கப்படும் அற்புதமான விளக்குகளின் வடிவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. OPPO Glow-வால் ஒரு பளபளப்பான மேட், கறை-எதிர்ப்பு பூச்சு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது. போனானது 188 கிராம் எடையுடன் மட்டுமே இருப்பதால் கையாள்வது மிகவும் இலகுவாக உள்ளது.

இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்:

இதில் வை-ஃபை, ப்ளூடூத் 5.3, 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், ஓடிஜி என பல இணைப்பு விருப்பங்கள் உள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

OPPO A78 5G-யானது க்ளோயிங் பிளாக், க்ளோயிங் ப்ளூ ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் ரூ.18,999 எனும் விலையில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 18-ம் தேதி முதல் மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள், OPPO E-Store மற்றும் அமேசான் ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில வங்கி கிரெடிட் கார்டுகளின் மூலம் வாங்கினால் மொத்த விலையில் 10% தள்ளுபடி செய்யப்படுகிறது. வாங்க விரும்பும் நுகர்வோருக்காக எக்ஸ்சேஞ்ச், இஎம்ஐ வசதியும் செய்யப்பட்டுள்ளது. OPPO A78 5G-யின் விலை வசதியானது, சந்தையில் உள்ள பிற ஸ்மார்ட் போன்களுக்கு சரியான போட்டியாக இருக்கும் என நம்பப்படுகிறது

- ராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com