இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானது பட்ஜெட் போன் பிரிவில் ஒப்போ A16K !

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானது பட்ஜெட் போன் பிரிவில் ஒப்போ A16K !
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானது பட்ஜெட் போன் பிரிவில் ஒப்போ A16K !

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் ரக போன்களுக்கு எப்போதுமே டிமேண்ட் இருப்பதுண்டு. ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள் அதனை நன்றாகவே அறிந்திருக்கும். அந்த வகையில் ஒப்போ நிறுவனம் இப்போது பட்ஜெட் பிரிவில் A16K என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நீலம், கருப்பு, வெள்ளை என மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. 

இதன் சிறப்பம்சங்கள்!

3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ், 6.52 இன்ச் HD டிஸ்பிளே, 13 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 5 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ G35 SoC சிப்செட், 4230 mAh பேட்டரி, கலர் OS 11.1, மைக்ரோ USB மாதிரியானவை இந்த போனில் இடம்பெற்றுள்ளது. 

பார்க்க ஸ்டைலிஷாகவும், லைட் வெயிட்டாகவும் உள்ள இந்த போனின் விலை 10,490 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் தளத்தில் இதனை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். இந்த போனில் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டு மற்றொரு வேரியண்ட் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com