Sam Altman
Sam AltmanFile Image

'மனித வேலைகளை ஒருபோதும் AI பறிக்காது' - OpenAI நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித வேலைகளை ஒருபோதும் பறிக்காது எனத் தெரிவித்துள்ளார் சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்.
Published on

இணையவெளியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது சாட் ஜிபிடி எனப்படும் ஏஐ சாட்பாட். செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த சாட் ஜிபிடி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு விரைவாகவும் துல்லியமாகவும் பதில் தருகிறது. இதனிடையே சாட் ஜிபிடியால் மனிதர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதனால் சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கூட எழுந்துள்ளது.

OpenAI
OpenAI

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித வேலைகளை ஒருபோதும் பறிக்காது எனத் தெரிவித்துள்ளார் சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சாம் ஆல்ட்மேன். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''ஏஐ தொழில்நுட்பத்தை மனிதனுக்கு மாற்றாக கருத்தில் கொள்ள முடியாது. பல பத்திரிகை நிறுவனங்கள் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகள் தயாரிக்கின்றன. அதற்குப் பதிலாக ஒரு பத்திரிகையாளருக்கு ஆராய்ச்சி செய்து யோசனைகளைக் கொண்டு வரக்கூடிய 100 உதவியாளர்களை போல் சாட் ஜிபிடி இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com