OpenAI CEO Sam Altman issues big warning for ChatGPT users
chatgptx page

சாட்ஜிபிடியிடம் மனம்விட்டு பேசுகிறீர்களா..? ஜாக்கிரதை..!

மனம் விட்டுப் பேச, உளவியல் ஆலோசனை பெற ஒரு நண்பன் தேவை என்றால், உடனே சாட்ஜிபிடியைத் தேடுகிறீர்களா? ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர்.
Published on

மனம் விட்டுப் பேச, உளவியல் ஆலோசனை பெற ஒரு நண்பன் தேவை என்றால், உடனே சாட்ஜிபிடியைத் தேடுகிறீர்களா? ஜாக்கிரதை! பலர், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களை இப்போது சாட்ஜிபிடி உடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், இந்த உரையாடல்களுக்கு வழக்கமான ரகசியப் பாதுகாப்பு கிடைக்காது என்று ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் எச்சரித்துள்ளார்.

OpenAI CEO Sam Altman issues big warning for ChatGPT users
chatgptx page

உண்மையான மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்களிடம் நீங்கள் பேசும் விஷயங்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு உண்டு. அதாவது, எதாவது வழக்கு என்றால், நீங்கள் பகிர்ந்த தகவல்களை அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்க தேவையில்லை. ஆனால், சாட்ஜிபிடி உடனான உங்கள் உரையாடல்களுக்கு அத்தகைய சட்டப் பாதுகாப்பு இல்லை என ஆல்ட்மேன் தெளிவாகக் கூறியுள்ளார். அதாவது, ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்பட்டால், உங்கள் தனிப்பட்ட உரையாடல்களை ஓபன்ஏஐ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும். நீங்கள் சாட்ஜிபிடியில் உங்கள் உரையாடல்களை நீக்கினாலும், சட்ட காரணங்களுக்காக 30 நாட்கள் வரை அவற்றை ஓபன்ஏஐ வைத்திருக்க முடியும். வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இருக்கும் End-to-End Encryption என்று முழுமையான பாதுகாப்பு சாட்ஜிபிடிக்கு இல்லை. இதனால், ஓபன்ஏஐ ஊழியர்கள் சில சமயங்களில் உங்கள் உரையாடல்களை ஆய்வு செய்யக்கூடும். எனவே, உங்கள் மிகவும் தனிப்பட்ட தகவல்களை சாட்ஜிபிடி-யில் பகிர்வதற்கு முன் இரண்டு முறை யோசிப்பது மிகவும் முக்கியம்.

OpenAI CEO Sam Altman issues big warning for ChatGPT users
'சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தால் மனித வேலைகள் பறிபோகுமா?' - டிசிஸ் அதிகாரி ’சார்ப்’ பதில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com