இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் 9RT: ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் 9RT: ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் 9RT: ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9RT ஸ்மார்ட்போன். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சீனாவில் அறிமுகமான இந்த போன் இப்போது இந்தியாவிலும் தனது விற்பனையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் இரண்டு வேரியண்டுகளில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC சிப்செட், 6.62 இன்ச் ஃபுள் ஹெச்.டி + AMOLED டிஸ்பிளே, 4500 mAh பேட்டரி, ரியர் சைடில் மூன்று கேமரா. அதில் 50 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா இடம் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11-இல் இயங்கும் இந்த போன் வரும் மார்ச் வாக்கில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டைப் சி சார்ஜிங் போர்ட், 5ஜி மற்றும் 4ஜி LTE வசதி, 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (விலை ரூ.42,999) மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (விலை ரூ.46,999) என இரண்டு வேரியண்டுகளில் இந்த போன் வெளியாகியுள்ளது. அதே போல கருப்பு மற்றும் சில்வர் நிறத்தில் இந்த போன் கிடைக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com