‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்

‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்
‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ‘6டி’ மெக்லரென் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் சந்தையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு நிறுவனம் குறைந்த விலையில் தரமான கேமரா கொடுத்தால், மற்றொரு ஜிபி அதிகமான ரேம் கொடுக்கிறது. இதேபோன்று பெரிய டிஸ்ப்ளே, அதிக இண்டெர்நல் ஸ்டோரேஜ், செல்ஃபி கேமரா என ஒவ்வோரு நிறுவனமும் ஒருவித ஸ்பெஷல் ஆப்ஷனுடன் தங்கள் ஸ்மார்ட்போனை வெளியிடுகின்றன. வாடிக்கையாளர்களும் தங்கள் தேவைக்கேற்ப ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து வாங்குகின்றனர். 

அந்த வகையில் ஒன்ப்ளஸ் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘6டி’ மெக்லரேன் எடிஷன் மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.50,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 10 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக மைக்ரோ சிப் மூலம் மெமரியை அதிகரித்துக்கொள்ள இயலாது. இந்த போன் டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அத்துடன் இன்றுமுதல் ஒன்ப்ளஸ் சோரூம்களில் நேரடி விற்பனை செய்யப்படுகின்றது.

6.41 இன்ச் முழு ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் வெளிவந்துள்ள இந்த போன், ஆண்ட்ராய்டு 9.0 பெய் இயங்குதளத்தில் செயல்படும். ‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் கேமராவை பொறுத்தவரை பின்புறத்தில் 16 எம்பி (மெகா பிக்ஸல்) இரட்டைக்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 20 எம்பி செல்ஃபி கேமரா ஒன்று இரட்டை ஃப்ளாஸ் லைட்டுகளுடன் உள்ளது. இதன் கேமராவில் நுட்பமான ஸ்லோவ் மோஷன் காட்சிகளை பதிவு செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 நிமிடங்களில் விரைவாக சார்ச் செய்யக்கூடிய வசதியுடன், 3,700 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com