ஜனவரி 4-ல் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்?

ஜனவரி 4-ல் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்?

ஜனவரி 4-ல் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்?
Published on

எதிர்வரும் 2022, ஜனவரி 4-ஆம் தேதி ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீன தேச சந்தையில் இந்த போனுக்கான முன்பதிவு இப்போது நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Pete Lau வரும் ஜனவரியில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து 5-ஆம் தேதியன்று இந்த போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என முதலில் தகவல் பரவிய நிலையில் ஒருநாள் முன்னதாக 4-ஆம் தேதி அறிமுகமாக உள்ளதாக தெரிகிறது.

TPO 2.0 டிஸ்ப்ளே, புதிய ஸ்னாப்டிராகன், எட்டாவது ஜெனரேஷன் 1 SoC, 12GB வரை ரேம் மற்றும் 80W விரைவான சார்ஜிங் திறன், ஆண்ட்ராய்ட் 12 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பின்பக்கத்தில் மூன்று கேமரா, அதில் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 50 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா Wide கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ கேமரா அடங்கும். 32 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவும் உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com