இனி நம் வாய்ஸ்நோட்ஸும் ஸ்டேட்டஸாக கேட்கலாமா? - வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்!

இனி நம் வாய்ஸ்நோட்ஸும் ஸ்டேட்டஸாக கேட்கலாமா? - வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்!
இனி நம் வாய்ஸ்நோட்ஸும் ஸ்டேட்டஸாக கேட்கலாமா? - வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்!

நம் குரலை வைத்து வாய்ஸ்நோட்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை பிரபல செயலியான வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இதன்மூலம் தகவல்கள் விரைவாகச் சொல்லப்படுவதுடன், புகைப்படங்களும் வீடியோக்களும் அனுப்பப்படுகின்றன. இதனால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்குத் தகுந்தபடி, வாட்ஸ்அப் செயலியை நிறுவனமாகக் கொண்டிருக்கும் மெட்டாவும், அதில் புதிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், நம் குரலைவைத்து வாய்ஸ்நோட்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டு 2.23.3.8 க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவும் சில பீட்டா யூசர்கள் முதற்கட்டமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என வாட்ஸ்அப்பைக் கண்காணிக்கும் வலைதளமான WABetaInfo தெரிவித்துள்ளது.

இந்த வசதியை பயன்படுத்த வேண்டும் என்றால், டைப்பிங் செய்யும் கீ-போர்டு அருகே இருக்கும் மைக்கை டேப் செய்து, குரல் பதிவை ரெக்கார்டு செய்துகொள்ள வேண்டும். இதன் பின்னர் நீங்கள் ஸ்டேட்டஸாக அதைப் பகிர்ந்துகொள்ளலாம். தொடக்கத்தில் குரல் பதிவிற்கான அதிகபட்ச பதிவு நேரம் 30 வினாடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் குரல் பதிவிற்கான நேரம் அதிகப்படுத்தப்படும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த குரல் பதிவு ஸ்டேட்டஸ்களை விரும்பிய நபர்களுக்கு பகிர்ந்துகொள்ளும் விதமாக தனியுரிமை அமைப்புகளைத் தேர்வு செய்யும் வசதியும் அளிக்கப்படும் எனவும், படங்கள் மற்றும் வீடியோக்களைப் போலவே, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரப்படும் குரல் பதிவுகளும் 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும் அம்சங்களும் உள்ளன. முன்னதாக ஆரம்பத்தில் வாட்ஸ்அப் குழுவில் 256 நபர்கள் இணையமுடியும் என்ற எண்ணிக்கை தற்போது 512 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com