“டிஜிலாக்கருடன் இணைக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவை. இனி பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை காகிதமில்லா முறையில் டிஜிட்டல் ஆவணங்களாக நாட்டு மக்கள் சமர்ப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார் வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறைகளின் இணை அமைச்சர் முரளிதரன். மேலும் பாஸ்போர்ட் சேவா திட்டம் நாட்டில் பாஸ்போர்ட் சேவை வழங்குவதில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆறு ஆண்டுகளில் பாஸ்போர்ட் கொடுக்கும் நடைமுறையில் கடலளவு மாற்றம் நிகழ்ந்துள்ளது. பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் மூலம் ஏழு கோடிக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமை செய்துள்ளோம். வரும் நாட்களில் டிஜி லாக்கர் மூலமாக இ - பாஸ்போர்ட் வழங்கவும் ஆலோசித்து வருகிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து மக்களும் இந்த சேவையை பயன்படுத்தி டிஜி லாக்கர் உதவியுடன் பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் அவர்.